அக்கரைப்பற்று பள்ளிவாசலில் இரத்ததான நிகழ்வு - News View

About Us

About Us

Breaking

Sunday, January 9, 2022

அக்கரைப்பற்று பள்ளிவாசலில் இரத்ததான நிகழ்வு

நூருல் ஹுதா உமர்

அக்கரைப்பற்று தக்வா பள்ளிவாயல் எற்பாட்டில் இரத்ததான நிகழ்வு சனிக்கிழமை (08) நடைபெற்றது. 

இதில் 231 இரத்த கொடையாளிகள் கலந்து கொண்டதிலிருந்து 202 நபர்களிடமிருந்து இரத்தம் சேகரிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார், அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர். ஏ.ரீ.எம்.றாபி, அக்கரைப்பற்று பிரதேச பள்ளிவாசல்களின் தலைவர்கள், அம்பாறை மாவட்ட இளைஞர்கள் சம்மேளன பிரதித்தலைவர் எம்.எம். ருக்ஸான் உட்பட சமூக ஆர்வலர்கள், வைத்தியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த இரத்ததான நிகழ்வில் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியதுடன் அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும், "கிழக்கின் கேடயம்" பிரதம செயற்பாட்டாளருமான எஸ்.எம். சபீஸ் அதிதிகளில் ஒருவராக கலந்துகொண்டதோடு இரத்ததானமும் வழங்கி வைத்தார்.

No comments:

Post a Comment