டொலர் தட்டுப்பாடு இருக்கும் வரை பால் மா தட்டுப்பாடு தொடரும் : உள்ளூர் பால் மா விலையையும் அதிகரிக்க நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, January 1, 2022

டொலர் தட்டுப்பாடு இருக்கும் வரை பால் மா தட்டுப்பாடு தொடரும் : உள்ளூர் பால் மா விலையையும் அதிகரிக்க நடவடிக்கை

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளூர் உற்பத்தி பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கால்நடைகள் மற்றும் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.

உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் 400 கிராம் பால் மா பக்கற்றின் விலையை 20 ரூபாவால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தையில் பால்மாவுக்கு நிலவும் தட்டுப்பாடு தொடர்வதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

நாட்டில் டொலருக்கான தட்டுப்பாடு நிலவும் வரை பால் மாவுக்கான தட்டுப்பாடும் தொடரும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் கடந்த ஒரு மாத காலமாக நாட்டில் நிலவும் பால்மா தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளது. 

சந்தையில் பால்மா தட்டுப்பாடு காரணமாக அந்த நிலை மேலும் தொடர்வதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. 

இறக்குமதி செய்யப்படும் பால் மா ஒரு கிலோவின் 150 ரூபாவாலும் 400 கிராம் பால்மா விலை 60 ரூபாவாலும் கடந்த இரு தினங்களுக்கு முன் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment