கொழும்புக்கு கொண்டு செல்ல முற்பட்ட 250 கிலோ கஞ்சா மீட்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, January 15, 2022

கொழும்புக்கு கொண்டு செல்ல முற்பட்ட 250 கிலோ கஞ்சா மீட்பு

யாழில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட 250 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா, ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கூலர் ரக வாகனம் ஒன்றினை இன்று (15) பிற்பகல் வவுனியா, ஈரப்பெரியகுளம் சோதனை சாவடியில் வழிமறித்து சோதனை செய்த போது குறித்த வாகனத்தில் கஞ்சா மறைத்து கொண்டு செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த வாகனத்தை முழுமையாக சோதனை செய்த போது பொதி செய்யப்பட்ட நிலையில் 250 கிலோ கஞ்சா மீட்கப்பட்டது.

இதனை உடமையில் வைத்திருந்தமை மற்றும் எடுத்துச் சென்றமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஈரப்பெரியகுளம் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியா தீபன்

No comments:

Post a Comment