ஐ.சி.சி.யின் 2022 இளையோர் உலகக் கிண்ணம் : டுபாயிலிருந்து நேரடியாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு புறப்படும் இலங்கை அணி - News View

About Us

Add+Banner

Sunday, January 2, 2022

demo-image

ஐ.சி.சி.யின் 2022 இளையோர் உலகக் கிண்ணம் : டுபாயிலிருந்து நேரடியாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு புறப்படும் இலங்கை அணி

.com/img/a/
ஆடவர்களுக்கான ஐ.சி.சி.யின் 19 வயதுக்குட்பட்ட 2022 உலகக் கிண்ண ஆரம்பநாள் நெருங்கி வருகின்ற நிலையில் ஒவ்வொரு அணிகளும் தங்களது வீரர்களின் விபரங்களை வெளியிடத் தொடங்கியுள்ளன.

போட்டிகள் ஜனவரி 14 முதல் பெப்ரவரி 05 ஆம் திகதி வரை நடைபெறும்.

முதன் முறையாக கரீபியன் தீவுகளில் நடத்தப்படும் போட்டிகளில் 16 நாடுகள் பங்கேற்கவுள்ளதுடன், மொத்தம் 48 ஆட்டங்கள் நடைபெறும்.

2022 இளையோர் உலகக் கிண்ண தொடரில் ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், கனடா, இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான், பப்புவா நியூகினியா, ஸ்கொட்லாந்து, தென்னாபிரிக்கா, உகண்டா, மேற்கிந்தியத் தீவுகள், சிம்பாப்வே மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்கும்.

இந்த தொடரில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற இளையோர் ஆசியக் கிண்ணத்தில் பங்கேற்ற 17 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை அணி, டுபாயில் இருந்து நேரடியாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு இன்று புறப்படவுள்ளது.

இலங்கை அணி அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுடன் ‘டி’ பிரிவில் விளையாடவுள்ளது.

இலங்கை தனது முதல் ஆட்டத்தில் ஸ்கொட்லாந்து அணியை ஜனவரி 14 அன்று ஜார்ஜ்டவுனில் உள்ள எவரெஸ்ட் கிரிக்கெட் கழக மைதானத்தில் எதிர்கொள்ளும்.

இலங்கை அணி விபரம்
துனித் வெல்லலகே (தலைவர்)
ஷெவோன் டேனியல்
அஞ்சல பண்டார
பவன் பதிராஜா
சதீச ராஜபக்ஷ
வனுஜா சஹன் குமார
ரவீன் டி சில்வா (உப தலைவர்)
ரனுத சோமரத்ன
மல்ஷா தருபதி
டிராவின் மெத்யூ
யாசிரு ரொட்ரிகோ
மதீஷ பத்திரன
சமிது விக்கிரமசிங்க
வினுஜா ரன்புல்
சகுன லியனகே
அபிஷேக் லியனாராச்சி
சதீஷ் ஜயவர்தன
.com/img/a/
.com/img/a/
.com/img/a/
.com/img/a/

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *