இலங்கையில் மேலும் 160 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முன்னதாக இலங்கையில் சுமார் 45 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் மொத்த ஒமிக்ரோன் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 205 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றாளர்களிடமிருந்து பெறப்பட்ட 182 மாதிரிகளில் இருந்து ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான மாதிரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பெறப்பட்டுள்ளன.
மாதிரிகள் தொடர்பான அறிக்கை இன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினால் முன்னெடுக்கப்பட்ட மாதிரிப் பரிசோதனைகள் மூலம் அனைத்து ஒமிக்ரோன் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment