தன்சானியாவின் பெம்பா தீவில் விஷம் கொண்ட ஆமை இறைச்சியை சாப்பிட்ட மூன்று வயது சிறுவன் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மூவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தன்சானிய தீவுகள் மற்றும் கரையோரப் பகுதிகளில் ஆமை இறைச்சி விருப்பத்திற்கு உரிய உணவு என்றபோதும், அந்தப் பகுதியில் ஆமைகளை நுகர்வதற்கு நிர்வாகம் தற்போது தடை விதித்துள்ளது.
இந்நிலையில் ஆமை இறைச்சி நஞ்சாவது மிக அரிதாக இடம்பெறும் ஒன்றாக கருதப்படுகிறது. இதற்கான சரியான காரணம் கண்டறியப்படாதபோதும் ஆமைகள் உண்ணும் நச்சுப் பாசிகளுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதில் ஐந்து குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த வியாழனன்று ஆமை இறைச்சியை உண்ட நிலையில் அடுத்த நாள் பாதிப்பு ஏற்பட்டு முதலில் சிறுவன் உயிரிழந்த நிலையில் அன்றையதினம் இரவு மேலும் இருவர் மரணித்துள்ளனர். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நால்வர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 38 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெரும்பாலானவர்கள் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.
No comments:
Post a Comment