இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் "சுரகிமு கங்கா" வேலைத்திட்டத்தின் அங்குரார்பன நிகழ்வு : ஆரம்பித்து வைத்தார் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 1, 2021

இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் "சுரகிமு கங்கா" வேலைத்திட்டத்தின் அங்குரார்பன நிகழ்வு : ஆரம்பித்து வைத்தார் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர்

நூருல் ஹுதா உமர்

நாடளாவிய ரீதியில் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் ஜனாதிபதியின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் "சுரக்கிமு கங்கா " வேலைத்திட்டம் "நிலைபேறான சூழலியல் முகாமைத்துவம்" எனும் கருப்பொருளின் கீழ் நாடுபூராகவும் உள்ள 103 ஆறுகளின் ஆற்றுப் படுக்கையை பாதுகாக்கும் இவ்வேலைத் திட்டத்தில் அம்பாரை மாவட்டத்தில் உள்ள கல்லோயா ஆற்றினை பாதுகாக்கும் நோக்குடன் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பன நிகழ்வு இறக்காமம் ஆஷ்பத்திரிச்சேனையில் இன்று புதன் கிழமை இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் எம்.சி.எம்.அஹமட் நஸீல் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபை பணிப்பாளர் எம். சிவகுமார் கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதிகளாக அம்பாறை மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபை உதவிப் பணிப்பாளர் எஸ்.உதயராஜன், இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.ஜெமீல் காரியப்பர் ஆகியோருடன் விஷேட அதிதிகளாக இறக்காமம் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எல்.ஹம்சார், சம்மாந்துறை நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.எம்.நவான், மத்திய சுற்றாடல் அதிகார சபை அம்பாறை காரியாலய சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.இஷாக் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.ஆஹிர், சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.பி.யமீனா உட்பட மத்திய சுற்றால் அதிகார சபை உத்தியோகத்தர்கள், நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள், ஆஷ்பத்திரிச்சேனை விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

சூழலியல் முகாமைத்துவத்தை மேம்படுத்தி இயற்கை வழங்களைப் பாதுகாக்கும் நோக்கில் இவ்வேலைத் திட்டமானது மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 

இவ் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக ஆறு மற்றும் ஆற்றுப் படுக்கைகளைப் பாதுகாப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதன் ஆரம்ப கட்டமாக ஆற்றுப் படுக்கைகளில் மண் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் ஆற்றுப் படுக்கை ஓரங்களில் மரங்களை நடுவதன் ஊடாக ஆற்று வளங்களையும் மண் அரிப்பையும் பாதுகாக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment