மிரிஹான பால் மா விற்பனை நிலைய சர்ச்சையும், பொலிஸாரின் தெளிவான அறிக்கையும் - News View

About Us

About Us

Breaking

Friday, December 31, 2021

மிரிஹான பால் மா விற்பனை நிலைய சர்ச்சையும், பொலிஸாரின் தெளிவான அறிக்கையும்

மிரிஹானவில் உள்ள உள்ளூர் பால் மா உற்பத்தியாளரின் விற்பனை நிலையத்திற்கு பொலிஸார் பலவந்தமாக நுழைந்து, நிலையத்தை சீல் வைத்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை இலங்கை பொலிஸ்துறை மறுத்துள்ளது.

பொலிஸாருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மிரிஹான ஜூபிலி போஸ்டில் அமைந்துள்ள பெல்வத்த பால் மா விற்பனை நிலையங்களுக்கு வெளியே மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதற்கான காரணங்களை சரிபார்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சில்லறை விற்பனைக் நிலையத்தில் பால் மா பாக்கெட்டுகளை வழங்குவதற்கும், ஒரேயொரு கவுன்டர் மாத்திரம் இருந்தமையினால் தாமதம் ஏற்பட்டது. இதனால் மக்கள் நீண்ட வரிசையில் நின்று கூட்டமாக அலை மோதினர் என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று (30) பெல்வத்தை டெய்ரி இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

கலந்துரையாடலைத் தொடர்ந்து, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மாவினை விநியோகிப்பதற்காக நிறுவனத்தின் சில்லறை விற்பனைக் கடைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது, இதனால் மக்கள் வரிசையில் நிற்பது தவிர்க்கப்படும்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களுடன் பரப்பப்படும் செய்திகளை வன்மையாக மறுப்பதாக இலங்கை பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.

கேசரி

No comments:

Post a Comment