நூருல் ஹுதா உமர்
மருதமுனை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பிரதேசத்திற்குட்பட்ட மருதமுனை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய சடலமொன்று இன்று காலை (08) அப்பகுதி மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டது.
நீண்ட நாட்களாக கடலில் இருந்தமையால் உடற்பாகங்கள் அழுகி உருக்குலைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
கரையொதுங்கியுள்ள இந்த சடலம் தொடர்பான விசாரணைகளை தற்போது கல்முனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment