இலங்கையில் உண்ணிக் காய்ச்சலால் ஒருவர் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, December 19, 2021

இலங்கையில் உண்ணிக் காய்ச்சலால் ஒருவர் உயிரிழப்பு

உண்ணிக் காய்ச்சல் காரணமாக மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.

யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூன்று நாட்களின் பின் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை இவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம், கொட்டடியைச் சேர்ந்த செபஸ்ரியன் பெனடிக் ரொசாரி (வயது-63) என்ற மூதாட்டியே உயிரிழந்தார்.

கடந்த 16 ஆம் திகதி காலை உடல்நலக் குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பயனின்றி அவர் நேற்று காலை உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்புக்கு உண்ணி காய்ச்சலே காரணம் என மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment