(இராஜதுரை ஹஷான்)
2022 ஆம் ஆண்டு முதல் தேசிய உற்பத்திகளை அடிப்படையாகக் கொண்டு ஏற்றுமதி பொருளாதாரத்துறையை மேம்படுத்த அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். அடுத்த வருடம் முதல் நாடு பல்துறைகளும் வளர்ச்சியடையும். கருவாப்பட்டை அபிவிருத்தி அதிகார சபையை ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெங்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருந்திக பிரனாந்து தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் பொருளாதார நடவடிக்கைகளையும், அடிப்படை நிர்வாகத்தையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது.
2020ஆம் ஆண்டு முதல் கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு முதல் தேசிய உற்பத்திகளை அடிப்படையாகக் கொண்டு ஏற்றுமதி பொருளாதாரத்தை மேம்படுத்த அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை 2024 ஆம் ஆண்டுக்குள் நிச்சயம் நிறைவேற்றுவோம்.
அடுத்த ஆண்டு முதல் தேசிய உற்பத்திகளை அடிப்படையாகக் கொண்டு அனைத்து துறைகளும் அபிவிருத்தி செய்யப்படும். அதன் உச்ச பலனை நாட்டு மக்கள் முழுமையாக பெற்றுக் கொள்வார்கள்.
கருவாப்பட்டை, கராம்பு, ஏலம் உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர் உற்பத்தியை மேம்படுத்த அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கறுவாப்பட்டை ஆகிய சிறு ஏற்றுமதி பொருட்களை அபிவிருத்தி செய்வது பிரதான நோக்கமாக உள்ளது. கறுவாப்பட்டை அபிவிருத்தி அதிகார சபையை ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment