பாகிஸ்தானின் சியல்கோட் சம்பவத்தில் உயிரிழந்த பிரியந்த குமாரவின் குடும்பத்திற்காக 100,000 அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 2.2 கோடி) வழங்க, சியல்கோட் வர்த்தக சமூகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, உயிரிழந்த பிரியந்த குமாரவின் மனைவிக்கு அவரது கணவர் பெற்று வந்த சம்பளத்தை வாழ்நாள் முழுவதும் வழங்குவதற்கும் சியல்கோட் வர்த்தக சமூகம் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் விடுத்துள்ள ட்விற்றர் அறிவித்தலில் இதை உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊழியர் நலன்புரி நிதியத்திலிருந்து ரூ. 25 இலட்சம் பணத்தை வழங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment