இலங்கை அணியின் வணிந்து ஹசரங்க T20 பந்து வீச்சில் முதலிடத்தில் : துடுப்பாட்டத்தில் பாபர் அசாம் : சகலதுறை பிரிவில் மொஹமட் நபி - News View

Breaking

Wednesday, November 3, 2021

இலங்கை அணியின் வணிந்து ஹசரங்க T20 பந்து வீச்சில் முதலிடத்தில் : துடுப்பாட்டத்தில் பாபர் அசாம் : சகலதுறை பிரிவில் மொஹமட் நபி

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் வணிந்து ஹசரங்க (776 புள்ளிகள்) ICC சர்வதேச T20 கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் தரப்படுத்தில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

உலகக் கிண்ணத் தொடரில் மிகச் சிறப்பாக பந்து வீசிய வணிந்து ஹசரங்க , சகல துறை பிரிவில் 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள இத்தரப்படுத்தல்களுக்கு அமைய, பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் (834) துடுப்பாட்டத்தில் முதலிடத்தை வகிக்கின்றார்.

அத்துடன், சகல துறை பிரிவில் ஆப்கானிஸ்தான் அணியின் மொஹமட் நபி (271) முதலிடத்தை வகிக்கின்றார்.

டெஸ்ட் துடுப்பாட்ட தரப்படுத்தலில் இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடத்தில்

டெஸ்ட் பந்து வீச்சு தரப்படுத்தலில் அவுஸ்திரேலியாவின் பெட் கம்மின்ஸ் முதலிடத்தில்

டெஸ்ட் சகலதுறை தரப்படுத்தலில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜேசன் ஹோல்டர் முதலிடத்தில்

ஒரு நாள் துடுப்பாட்ட தரப்படுத்தலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் முதலிடத்தில்

ஒரு நாள் பந்துவீச்சு தரப்படுத்தலில் நியூஸிலாந்தின் ட்ரன்ட் போல்ட் முதலிடத்தில்

ஒரு நாள் சகலதுறை தரப்படுத்தலில் பங்களாதேஷின் ஷகிப் அல் ஹஸன் முதலிடத்தில்

No comments:

Post a Comment