வெளிநாட்டு நாணயங்களுக்கு தலிபான்கள் தடை - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 3, 2021

வெளிநாட்டு நாணயங்களுக்கு தலிபான்கள் தடை

ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பணத்தை பயன்படுத்த தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள ஆப்கன் பொருளாதாரத்தை இந்த முடிவு மேலதிக பாதிப்புக்கு உள்ளாக்கும் வாய்ப்புள்ளது.

பொருளாதார சூழ்நிலை மற்றும் தேசிய நலனை கருத்தில் கொண்டு ஆப்கானியர்கள் அனைவரும் 'ஆப்கனி' நாணயத்தை, தங்களது அனைத்து வர்த்தகங்களிலும் பயன்படுத்த வேண்டும் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் அந்நாட்டுக்கு வழங்கப்பட்டு வந்த சர்வதேச நிதி உதவிகள் நிறுத்தப்பட்டன.

ஆப்கானிஸ்தான் வர்த்தகர்களால் பன்னாட்டுச் சந்தைகளில் வர்த்தகம் செய்ய அமெரிக்க டொலர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் ஆப்கானியர்கள் வர்த்தகம் செய்வதற்கு அமெரிக்க டொலரே பயன்படுத்தப்பட்டது

No comments:

Post a Comment