நல்லாட்சி அரசாங்கம் இல்லாவிட்டால் அரச ஊழியர்கள் பிச்சை எடுக்க வேண்டிய நிலையே இருந்திருக்கும் : சமூகவலைத்தளங்களில் விமர்சிப்போருக்கு தண்டனை வழங்கும் சுற்று நிருபத்தை வாபஸ் பெற வேண்டும் - ரஞ்சித் மத்தும பண்டார - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 24, 2021

நல்லாட்சி அரசாங்கம் இல்லாவிட்டால் அரச ஊழியர்கள் பிச்சை எடுக்க வேண்டிய நிலையே இருந்திருக்கும் : சமூகவலைத்தளங்களில் விமர்சிப்போருக்கு தண்டனை வழங்கும் சுற்று நிருபத்தை வாபஸ் பெற வேண்டும் - ரஞ்சித் மத்தும பண்டார

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

நல்லாட்சி அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு செய்திருக்காவிட்டால், நாட்டில் தற்போது இருக்கும் பொருட்களின் விலை அதிகரிப்பில் அரச ஊழியர்கள் பிச்சை எடுக்க வேண்டிய நிலையே இருந்திருக்கும். அத்துடன் அரசாங்கத்தின் தவறுகளை சமூகவலைத்தளங்களில் விமர்சிக்கும் அரச ஊழியர்களுக்கு தண்டனை வழங்கும் சுற்று நிருபத்தை அரசாங்கம் வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, தேசிய மரபுரிமைகள் ,அருங்கலைகள்,மற்றும் கிராமிய கலைநுட்ப, மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், அரசாங்கம் இரசாயன உரத்தை தடை செய்து விவசாயிகளை 6 மாதங்களுக்கும் அதிக காலம் பாதிக்கச் செய்து, விவசாய உற்பத்திகளை வீழ்ச்சியடையச் செய்த பின்னர் இரசாயன உரத்தை தடை செய்து விடுக்கப்பட்டிருந்த வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் மீளப்பெற்றுள்ளது. இது அரசாங்கத்தின் இயலாத்தன்மையையே காட்டுக்கின்றது.

விவசாயிகளுக்கு ஆதரவளித்து நாங்கள் போராட்டம் ஒன்றை செய்தோம். அந்த போராட்டம் செய்து 7 நாட்களில் அரசாங்கம் வர்த்தமானி அறிவிப்பை மீள பெற்றுக் கொண்டிருக்கின்றது. இது எங்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

மேலும் நிதி அமைச்சர் அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமை என தெரிவித்து, அரச சேவையை அகெளரவப்படுத்தி இருக்கின்றார். மலேசியா போன்ற நாடுகளின் நிர்வாக சேவையில் எமது நாட்டைச் சேர்ந்த நிர்வாக அதிகாரிகளே பணிபுரிகின்றனர்.

எமது நாட்டில் நிர்வாக சேவையில் சாதாரண இராணுவத்தினரயும் அரசியல் இலாபத்துக்கும் ஆட்சேர்ப்பு செய்து அரச சேவையின் கெளரவத்தை இல்லாமல் செய்திருக்கின்றது.

ஆனால் நல்லாட்சி அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதாக வாக்குறுதி அளித்து அதனை நிறைவேற்றியது. வரலாற்றில் அரச ஊழியர்களுக்கு இந்தளவு சம்பள அதிகரிப்பு வழங்கியது எமது அரசாங்கத்திலாகும்.

நல்லாட்சி அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு செய்திருக்கா விட்டால், நாட்டில் தற்போது இருக்கும் கேஸ்விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை அகரிப்பினால் அரச ஊழியர்களுக்கு பிச்சை எடுக்க வேண்டிய நிலையே ஏற்பட்டிருக்கும்.

அரச ஊழியார்களின் சம்பள அதிகரிப்புக்காக அன்று நாங்கள் 250 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் ஒதிக்கி இருந்தோம். என்றாலும் கடந்த தேர்தலில் இந்த அரசாங்கத்தை அமைப்பதற்காக 80 வீதமான அரச ஊழியர்கள் வாக்களித்திருந்தனர். அதனால் நாங்கள் அதிகரித்த சம்பளத்தின் பெறுமதியை அரச ஊழியர்கள் இழந்து வருகின்றனர். பொருட்களின் விலை அதிகரிப்பால் வாழ்க்கையை கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.

அத்துடன் சமூக வலைத்தளங்கள் ஊடாக அரச சேவையை விமர்சித்தால் அரச ஊழியர்கள் தண்டிக்கப்படுவார்கள் என அரசாங்கம் சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டிருகின்றது. இராணுவ அதிகாரி ஒருவரை செயலாளராக நியமித்து இதனை அரசாங்கம் செய்துவருகின்றது.

அரசாத்தின் தவறுகளை விமர்சிப்பதற்கு அரச ஊழியர்களுக்கு உரிமை இல்லையா என கேட்கின்றேன். இது அரச ஊழியர்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல். இந்த நடவடிக்கை சிவில் நிர்வாகத்தில் இருந்து இராணுவ ஆட்சிக்கு செல்வதற்கா வழிவகுக்கின்றது என கேட்கின்றேன். அதனால் தயவுசெய்து அந்த சுற்று நிருபத்தை வாபஸ் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment