தாய்லாந்து முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் தனது எல்லைகளை திறந்துள்ளது.
18 மாத கொவிட் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு நாடு தனது சுற்றுலாத் துறையை மீண்டும் ஆரம்பிப்பதனால், பல்லாயிரக்கணக்கான பயணிகள் பேங்கொக் மற்றும் ஃபூகெட்டை வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் இராச்சியத்தின் பொருளாதாரத்தை பாதித்துள்ளது, சுற்றுலா அதன் தேசிய வருமானத்தில் கிட்டத்தட்ட 20% ஆகும். 1997 ஆசிய நிதி நெருக்கடிக்குப் பிறகு கடந்த ஆண்டு அதன் பொருளாதாரம் மோசமான செயல்திறனைக் கண்டது.
புதிய பயண வழிகாட்டல்கள் நவம்பர் 1 முதல் 60 க்கும் மேற்பட்ட "குறைந்த ஆபத்துள்ள" நாடுகளில் இருந்து தடுப்பூசி போடப்பட்ட சுற்றுலாப் பயணிகளை ஹோட்டல் தனிமைப்படுத்தலைத் தவிர்க்க அனுமதிக்கும் என்று தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, தடுப்பூசி செலுத்தப்பட்ட சுற்றுலாப் பயணிகள் குறைந்தது ஏழு நாட்கள் ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டியிருந்தமையும் குறிப்பிடத்கத்கது.
No comments:
Post a Comment