உலக அழகி போட்டிக்கு சென்றவருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 30, 2021

உலக அழகி போட்டிக்கு சென்றவருக்கு கொரோனா

இஸ்ரேலில் நடைபெற உள்ள பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்கும் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

பிரபஞ்ச அழகி (மிஸ் யூனிவர்ஸ்) போட்டி வருகிற டிசம்பர் 12ம் தேதி இஸ்ரேலில் நடைபெறுகிறது. அங்குள்ள ஏலாத் நகரில் போட்டி நடக்கிறது.

இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 அழகிகள் இஸ்ரேலுக்கு வந்துள்ளனர். இதற்கிடையே இஸ்ரேலில் புதிய வகை கொரோனாவான ஒமிக்ரொன் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இஸ்ரேலுக்கு வெளிநாட்டினர் வர கடந்த 27ம் தேதி தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் திட்டமிட்டபடி உலக பிரபஞ்ச அழகி போட்டி நடைபெறும் என்று அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

போட்டியில் பங்கேற்கும் அழகிகள் ஏலாத் நகரில் உள்ள ‘ரெட்னீ’ ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 48 மணி நேரத்துக்கு ஒரு முறை பரிசோதனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்கும் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

மேலும் அந்த அழகி புதிய வகை கொரோனாவான ஒமிக்ரொன் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளரா? என்பதும் தெரியவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அழகிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது உலக அழகி போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment