மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய அதிபர் யு.எல்.எம். புஹாரி அவர்களின் எதிர்பாராத மறைவு மிகவும் கவலை தருகின்ற ஒரு துயர நிகழ்வாகும் - அலிசாஹிர் மௌலானா - News View

About Us

About Us

Breaking

Monday, November 1, 2021

மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய அதிபர் யு.எல்.எம். புஹாரி அவர்களின் எதிர்பாராத மறைவு மிகவும் கவலை தருகின்ற ஒரு துயர நிகழ்வாகும் - அலிசாஹிர் மௌலானா

இன்று காலை என் காதுகளை அதிரச் செய்த மட் / மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய அதிபர் யு.எல்.எம். புஹாரி அவர்களின் எதிர்பாராத மறைவு மிகவும் கவலை தருகின்ற ஒரு துயர நிகழ்வாகும் என முன்னாள் ராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக கல்குடா கல்விச் சமூகமும் மாவட்ட சமூகமும் எதிர்பாராத வகையில் பெறுமதிமிக்க ஒரு சில அதிபர், ஆசிரியர்கள் , புத்திஜீவிகளை இழந்து வருகின்ற நிலையில் இன்று மீண்டுமொரு அதிபரின் இழப்பினை சந்தித்திருப்பது மிகவும் கவலையடையச் செய்துள்ளது.

மர்ஹூம் யு.எல்.எம். புஹாரி அதிபர் அவர்கள் என்னுடன் நீண்ட காலமாக அறிமுகமாகி தொடர்புகளை கல்வி ரீதியாகவும், சமூக அரசியல் ரீதியாகவும் பேணி வந்தவர், எங்கிருந்தாலும் எந்த பாடசாலையில் இருந்தாலும் எடுத்த பொறுப்பினை சரிவர நிறைவேற்றிட வேண்டும் என்ற உள்ளத்து வேட்கையுடன் செயலாற்றக் கூடிய அர்ப்பணிப்பு மிக்க நிருவாகி அவர்.

இவர் எந்த வேளையிலும் தன் மூலமாக ஏதாவது எதிர்கால சமூகத்திற்கு செய்து விட வேண்டும் , கடமையாற்றுகின்ற பகுதியின் கல்வி வளர்ச்சியிலே அதீத அக்கரையுடன் பணியாற்றக் கூடிய பண்புகள் நிறைந்தவர்.

பாலக்காடுவெட்டை ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயமாக இருக்கட்டும், அண்மைக் காலமாக பணியாற்றிய மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயமாக இருக்கட்டும் திறம்பட செயலாற்றிய ஒருவராக இவர் காணப்படுகிறார்.

இறுதியாக மீராவோடை ஹிதாயாவில் தான் பணியாற்றக்கிடைத்த சொற்ப காலத்திற்குள் இப்பாடசாலையை மிகவும் சிறப்பான முறையில் அபிவிருத்தி செய்தார். கல்வி அபிவிருத்தியில் சிறந்த பெறுபேறுகளை இப்பாடசாலை ஈட்டியது.

அத்துடன் தான் ஓய்வு பெறும் வரை இப்பாடசாலையிலேயே பணியாற்ற வேண்டும் என்ற உறுதி மொழியினை தன்னகத்தே கொண்ட ஒருவராக முனைப்புடன் மிகவும் கடினமாக அர்ப்பணித்து செயலாற்றிய ஒருவரை குறித்த பாடசாலை சமூகம் இன்றைய நாளிலே இழந்து நிற்கிறது.

இந்நிலையில் அன்னாரின் பிரிவினால் கவலையுற்று நிற்கும் குடும்ப உறவுகள், நண்பர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையைக் கொடுப்பதுடன் , சிறந்த பண்பாளரும், சமூகப்பணியாளருமான மர்ஹூம். யு.எல்.எம். புஹாரி அதிபர் அவர்களின் பாவங்களை வல்ல நாயன் மன்னித்தருளி, மறுமை வாழ்வை சிறப்பித்து, ஜன்னத்துல் பிரதௌஸ் என்னும் சொர்க்கத்தை அன்னாருக்கு வழங்க பிரார்த்திக்கின்றேன்.

No comments:

Post a Comment