யாழ் மாநகர சபை வரலாற்றில் முதல் தடவையாக, சபை அமர்வு செங்கோலுடன், மாநகர முதல்வர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த வரலாற்று நிகழ்வு இன்றையதினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மாநகர முதல்வர் வி. மணிவண்ணனின் வேண்டுகோளுக்கு அமைய அண்மையில் இறைவனடி சேர்ந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானம் யாழ்.மாநகர சபைக்கு செங்கோல் ஒன்றினை வழங்கியது.
நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 11ஆவது நிர்வாக அதிகாரி குமரேஷ் சயந்தன் குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட செங்கோலுடன் வரலாற்றில் முதல் தடவையாக இன்றைய மாநகர அமர்வு மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ். நிருபர் பிரதீபன்
No comments:
Post a Comment