முன்னாள், இந்நாள் ஜனாதிபதிகளுக்கு எதிரான படுகொலை சூழ்ச்சி : உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஐ.தே.க. கோரிக்கை - News View

Breaking

Thursday, November 4, 2021

முன்னாள், இந்நாள் ஜனாதிபதிகளுக்கு எதிரான படுகொலை சூழ்ச்சி : உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஐ.தே.க. கோரிக்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரை படுகொலை செய்வதற்கு திட்டம் தீட்டப்பட்டதாக தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோரை படுகொலை செய்வதற்கு திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அண்மையில் ஊடக சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

சூழ்ச்சியொன்று இருந்ததாகக் கூறிவிட்டு அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படாதது ஏன்? என்றும் பாலித்த ரங்கே பண்டார கேள்வி எழுப்பியுள்ளார். 

மேற்படி சூழ்ச்சிகள் இரண்டு நிறைவேற்று ஜனாதிபதிகள் தொடர்பானது என குறிப்பிட்டுள்ள ரங்கே பண்டார அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு எந்தவித தடையும் கிடையாது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment