மக்களது ஆணையை அரசாங்கம் தவறாக பயன்படுத்தியதில்லை, ஒருபோதும் முயற்சித்ததும் இல்லை என்கிறார் தினேஷ் - News View

About Us

About Us

Breaking

Friday, November 19, 2021

மக்களது ஆணையை அரசாங்கம் தவறாக பயன்படுத்தியதில்லை, ஒருபோதும் முயற்சித்ததும் இல்லை என்கிறார் தினேஷ்

நாட்டை பாதிக்கும் வகையில் மக்கள் வழங்கிய ஆணையை ஒருபோதும் அரசு உபயோகிக்கவில்லையென கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் எத்தகைய விமர்சனங்களை மேற்கொண்டாலும் கொரோனா வைரஸிலிருந்து நாட்டு மக்களையும் ஆளும் கட்சியை மட்டுமன்றி எதிர்க்கட்சியினரையும் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதி முன்னுரிமை அளித்ததுடன் அதற்காக அரசாங்கம் தன்னை அர்ப்பணித்து செயற்பட்டது என்பதை எவரும் மறந்து விடக்கூடாதென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மேற்கொண்ட அத்தகைய தீர்மானங்களே தற்போது அரசத்துறை மற்றும் தனியார் துறையை மீள புத்துயிர் பெறச் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொட்டாவை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் தொடர்ந்தும் பேசிய அவர், ஒருபுறம் அரசாங்கம் அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளது. மறுபுறம் இந்த நூற்றாண்டில் நாமும் நாடும் முழு உலகமும் கொரோனா வைரஸ் சவால்களுக்கு முகம் கொடுத்துள்ள தருணம் இது.

பல கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ஆகியோரின் தலைமைத்துவத்தில் அரசாங்கமொன்று உருவாக்கப்பட்டுள்ள நிலையில் எம் முன்னிலையில் சவால்கள் நிறைந்துள்ளன. 

மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதிலும் அரசியல் துறை மற்றும் பொருளாதார துறைகளுக்கும் இந்த காலம் மிகவும் முக்கியமான காலமாகும்.

பல்வேறு கட்சிகள் இணைந்து பெற்றுக் கொள்ளப்பட்ட இந்த சந்தர்ப்பத்தை நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக உபயோகித்ததுடன் நாட்டைப் பாதிக்கும் வகையில் மக்கள் வழங்கிய ஆணையை நான் ஒருபோதும் உபயோகப்படுத்தவில்லை.

அதேபோன்று நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசங்களில் முதலீடுகளுக்காக அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், தனியார் நிறுவனங்களுக்கு வழங்கவேண்டிய ஒத்துழைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

நாம் எதிர்நோக்கும் வர்த்தக சந்தையில் உலகில் அனைவரும் செயற்படவேண்டியது யதார்த்தமாகும். இத்தகைய நிலையில் நிதியமைச்சர் சமர்ப்பித்துள்ள வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அடுத்த சில வருடங்களுக்கு மிக பலம் வாய்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment