உலகளாவிய இயக்கத்துடன் இலங்கை பாராளுமன்றம் ஒருமைப்பாட்டுடன் நிற்கின்றது : நெருக்கமான துணைகளே உடல் ரீதியான வன்முறையைத் தூண்டுகிறது - News View

About Us

About Us

Breaking

Thursday, November 25, 2021

உலகளாவிய இயக்கத்துடன் இலங்கை பாராளுமன்றம் ஒருமைப்பாட்டுடன் நிற்கின்றது : நெருக்கமான துணைகளே உடல் ரீதியான வன்முறையைத் தூண்டுகிறது

பாராளுமன்றத்தை ஆரஞ்சு ஆக்குதல் - பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டியத்தின் உலகளாவிய இயக்கத்துடன் இலங்கை பாராளுமன்றம் ஒருமைப்பாட்டுடன் நிற்கின்றது. “பாலின அடிப்படையிலான வன்முறை என்பது பாலினக் கலைச் சொற்களில் கிட்டத்தட்ட அலுத்துப்போன சொல் ஒன்றாக மாறிவிட்டது. நாங்கள் அதைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசினோம், அது உண்மையில் அதன் சாரத்தை இழந்துவிட்டது. ஆனால், அது வெறும் சொல் அல்ல. இது உலகிலும் இலங்கையிலும் முற்றிலும் கசப்பான உண்மையாகும்” என கோவிட்19 கட்டுப்பாடு, ஆரம்ப சுகாதாரம் மற்றும் தொற்றுநோய்களுக்கான இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

புள்ளிவிவரங்கள் ஒரு பாதி உண்மையை மட்டுமே தெரிவிக்க முடியும் ஆனால் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்பது பெறுமதியானது.

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய முதலாவது அர்ப்பணிக்கப்பட்ட தேசிய கணக்கெடுப்பான பெண்கள் மற்றும் நல்வாழ்வு கணக்கெடுப்பு 2019ஆனது, இலங்கைப் பெண்களில் நான்கில் ஒரு பெண் உடல் ரீதியாக அல்லது பாலியல் ரீதியான வன்முறைகளை அனுபவித்துள்ளதாக தெரிவிக்கின்றது.

கிட்டத்தட்ட 40 சதவீத பெண்கள் உடல், பாலியல், மன ரீதியான மற்றும் அல்லது பொருளாதார வன்முறை மற்றும், அல்லது துணையினால் கட்டுப்படுத்தப்படும் நடத்தைகளுக்கு ஆளாகியுள்ளனர்.

தோட்டத் துறையில் பெண்களுக்கு எதிரான வன்முறை நிலைமைகள் மிகவும் மோசமானவை என்பதை கணக்கெடுப்பானது அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

உடல் மற்றும் பாலியல் வன்முறைகள் பெரும்பாலும் ஒரே சமயத்தில் இடம்பெற்றுள்ளதையும் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை திரும்பத் திரும்ப நடந்துள்ளதையும் அறிக்கை உறுதிப்படுத்துகின்றது.

உதாரணமாக, உடலுறவு கொள்ள கட்டாயப்படுத்தப்பட்ட பெண்களில் 65 சதவீதம் பேர் தாங்கள் இந்த வன்முறையை இரண்டு முதல் மூன்று முறை சந்தித்துள்ளதாகவும் மற்றும் 32 சதவீதம் பேர் ஐந்து முறைக்கு மேல் உடலுறவு கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

துணை அல்லாதவர்களை விட நெருக்கமான துணைகளே உடல் ரீதியான வன்முறையைத் தூண்டுவதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

ஏயுறு இனால் பாதிக்கப்பட்ட பெண்களில் நீண்ட கால உடல் மற்றும் மனநல பாதிப்புகள் முக்கியமாக பதிவாகியுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் பாலியல் மற்றும் உடல் ரீதியான வன்முறையால் தொடர்ந்தும் காயம் அடைந்துள்ளதாகவும், 20 சதவீதம் பேர் காயங்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் தெரிவித்தனர்.

துணை ஒருவரினால்; பாலியல் வன்முறைக்கு ஆளான பாதிக்கப்பட்டவர்களில் அரைவாசி பேர் அவர்கள் எதிர்கொள்ளும் வன்முறையின் தாக்கத்தை “அதிகளவு” என்று மதிப்பிட்டுள்ளனர். அதேவேளை மற்றொரு 30 சதவிகிதத்தினர் அதை “சிறிதளவு” என்று மதிப்பிட்டுள்ளனர்.

கோவிட்19 ஆனது இலங்கையிலும் மற்றும் உலகெங்கிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் உடல் ரீதியான வன்முறைகளின் அளவை மட்டுமே மோசமாக்கியது இது மீண்டும் மீண்டும் செய்திகளில் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை பாராளுமன்றத்தினால் ஏற்படுத்தப்பட்ட பாலின ஒப்புறவு மற்றும் சமத்துவம் தொடர்பான விஷேட தெரிவுக்குழு ஒன்று புடீஏ இனையும் ஆராய்ந்து, மற்றும் பாலின ஒப்புறவு மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான பரிந்துரைகளைப் பாராளுமன்றத்திற்கு வழங்குவதுடன் இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமை மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துகின்றது.

பெர்னாண்டோபுள்ளே தலைமையிலான குழு சட்ட மன்றம் மற்றும் நிர்வாகத்துடன் கைகோர்த்து பாலின ஏற்றத்தாழ்வுகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை அவர்களின் பிரதிநிதித்துவ மற்றும் மேற்பார்வை ஆணைகளைப் பயன்படுத்திக் குறைப்பதற்காகப் பணிபுரிகின்றது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினமான நவம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்களின் செயற்பாட்டியத்தை உலகானது குறிக்கும் நிலையில் இந்த ஆண்டும் மனித உரிமைகள் தினமாக ஐநா பொதுச் செயலாளரின் பிரச்சாரம் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் உலகளாவியக் கருப்பொருள் “ஆரஞ்சு தி வேர்ல்ட் - பெண்களுக்கு எதிரான வன்முறையை இப்போதே ஒழிக்கவும்!” ஆகும்.

தெரிவுக்குழுவின் கூட்டு முயற்சியாக இன்று (நவம்பர் 25) பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆரஞ்சு நிறத்தை அணிந்து பாராளுமன்றத்தை ஆரஞ்சு ஆக்குவதனால் இலங்கை பாராளுமன்றமானது உலகளாவிய இயக்கத்துடன் ஒருமைப்பாட்டுடன் நின்று உலகளாவிய கருப்பொருளுடன் ஒன்றிணைகின்றது.

முறைசாரா துறையில் பெண்கள் எதிர்கொள்ள வேண்டிய வன்முறையின் வடிவங்களை வலியுறுத்தி கௌரவ. டயானாகமகே தெரிவுக்குழுவின் உறுப்பினர் 11 நவம்பர் 2021 அன்று பாராளுமன்றத்தில் “பெண்கள் அனுபவிக்க வேண்டிய பாகுபாடு காரணமாக அவர்கள் பாதுகாப்பற்ற வேலைகளில் முடிவடைகின்றனர். பாகுபாடுகாரணமாக அவர்கள் பல துன்புறுத்தல்களை சந்திக்க வேண்டியுள்ளது. இது பாலியல் துன்புறுத்தல், மன ரீதியான துன்புறுத்தல் மற்றும் சில சந்தர்ப்பங்களில்ரூபவ் உடல்ரீதியான துன்புறுத்தலாக இருக்கலாம். எனவே அதைமாற்ற வேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment