சபுகஸ்கந்த அருகிலுள்ள குப்பை மேட்டில் பயணப் பையில் பெண்ணின் சடலம் - News View

Breaking

Thursday, November 4, 2021

சபுகஸ்கந்த அருகிலுள்ள குப்பை மேட்டில் பயணப் பையில் பெண்ணின் சடலம்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த பயணப் பொதியொன்றில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

வீதிக்கு அருகில் குப்பை சேகரிக்கப்பட்டிருந்த இடத்தில் குறித்த பயணப் பொதி காணப்பட்ட நிலையில், பொலிஸார் அதனை மீட்டுள்ளதாக தெரிவித்தார்.

களனிப் குற்றப் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள் குறித்த இடத்தை சோதனையிட்டு வருவதாக அவர்.

குறித்த பெண் யார் என்பது தொடர்பிலான விசாரணைகளை, களனி பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ், சபுகஸ்கந்த பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

No comments:

Post a Comment