கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரத்தை சில எம்.பிக்கள் துஷ்பிரயோகம் செய்துவருகின்றனர் : இது வாக்களித்த மக்களை அவமதிக்கும் செயல் என்கிறார் சபாநாயகர் - News View

Breaking

Monday, November 22, 2021

கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரத்தை சில எம்.பிக்கள் துஷ்பிரயோகம் செய்துவருகின்றனர் : இது வாக்களித்த மக்களை அவமதிக்கும் செயல் என்கிறார் சபாநாயகர்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வகையிலும் கருத்துக்களை வெளியிட சுதந்திரம் உள்ளது என்பதற்காக சிலர் அவ்வாறான சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்துவருவதாகவும் இவ்வாறான செயற்பாடுகள் தமக்குமட்டுமன்றி, தமக்கு வாக்களித்த மக்களையும் அவமதிக்கும் செயல் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கவலை தெரிவித்தார்.

அண்மைக் காலமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், பாராளுமன்றத்தினுள் தவறான நடத்தைகளை வெளிப்படுத்தும் பதாகைகளை காட்சிப்படுத்தினார்கள். இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து வந்துள்ளதாகவும் இவற்றைக் கட்டுப்படுத்த சட்டங்களை கொண்டுவரும் எண்ணம் இல்லை எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.

கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்கு விஜயம் செய்து , அங்கு வழிபாடுகளில் கலந்து கொண்ட பின்னர், ஊடகவியலாளர் மத்தியில் சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரையாற்றிய சபாநாயகர், பாராளுமன்றத்தில முறைகேடாக நடந்துகொள்வதனால் பாராளுமன்ற உறுப்பினர்களினது கௌரவம் கண்ணியம் என்பன இல்லாதுபோகின்றன. 

ஆகவே கோவிட் அபாயம் நீங்குகின்ற வரை அனைவரும் தனித்தனியாக நமது கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றி, ஒவ்வொருவரும் முதலில் தன்னை தான் பாதுகாத்துக் கொள்ளல் அவசியமாகும். 

அவ்வாறு தம்மை மாற்றிக் கொள்வதன் மூலமே நாடு முழுதும் மிக பயங்கரமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த கோவிட் நோயிலிருந்து நாமும் எமது நாடும் விடுபட முடியும் .

வரவு செலவுக்கான விவாதத்தின் போது நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்ற மரபு இல்லை.

வேலைப்பளுவினால் அமைச்சர் வராதிருக்கலாம். சில முக்கிய காரணம் நிமித்தம் அவருக்கு வெளியில் சென்றுவரமுடியும் என தெரிவித்தார்.

மேலும் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளது. உற்பத்தியின் சரிவு இதுவரை உலகில் வர்த்தக போக்கை மாற்றியுள்ளது என தெரிவித்த சபாநாயகர், இதனை மக்கள் புரிந்து கொண்டு பொறுமையுடன் செயற்பட வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

(எம்.ஏ.அமீனுல்லா)

No comments:

Post a Comment