மரக்கறி விலைகள் பன்மடங்கு உயர்வு : கோதுமை மாவுக்கு திடீர் தட்டுப்பாடு ? - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 24, 2021

மரக்கறி விலைகள் பன்மடங்கு உயர்வு : கோதுமை மாவுக்கு திடீர் தட்டுப்பாடு ?

(கே.மொரின்)

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் மரக்கறி வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், நாளந்த சந்தைகளில் அவை அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இன்று கொழும்பு புறக்கோட்டை, வெள்ளவத்தை, நாரஹென்பிட்டி ஆகிய பகுதிகளிலுள்ள மரக்கறி சந்தைகளில் ஒரு கிலோ கத்தரிக்காய் 320 ரூபாவாகவும், 1 கிலோ கரட் 400 ரூபாவாகவும், 1 கிலோ பீட்ரூட் 240 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டன. இதனால் நுகர்வோர் பெரும் நெருக்கடிக்கு ஆளானார்கள்.

அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காணப்படுவதுடன், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பசுமை விவாசாயக் கொள்கையை அடுத்து இராசாயனப் பசளை முற்றாக தடைப்பட்டுள்ளமை என்பவையே இதற்கான காரணங்கள் என கூறப்படுகிறது.

இதன் விளைவாக மரக்கறி உள்ளிட்ட பெரும்பாலன பயிர்களின் அறுவடை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மரக்கறி விலை உயர்ந்ததோடு அவற்றுக்கு தட்டுபாடும் நிலவி வருகின்றன.

இதன் அடிப்படையில் உற்பத்தி வீதம் குறைவதினால் மரக்கறிளின் விலை அதிகரிக்கப்படுகிறது. அத்துடன் விலை அதிகரிப்பினால் நுகர்வோரின் வருகையும் குறைந்துள்ளது. இதனால் மரக்கறி வியாபாரிகளும், விவாசாயிகளும் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை கேள்வி குறியாகியுள்ளது. மற்றும் வருகின்ற நாட்களில் இதனை விடவும் நெருக்கடி ஏற்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

இதேவேளை இன்று கோதுமைமாவுக்கு பலத்த தட்டுப்பாடு காணப்பட்டது. கோதுமைமாவை கொள்வனவு செய்ய வந்த நுகர்வோர் பலர், வெறுங்கையுடன் வீடு திரும்ப நேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment