இஸ்ரேல் வான் தாக்குதலில் இரு சிரிய பொதுமக்கள் பலி, ஏழு பேர் காயம் - News View

Breaking

Wednesday, November 24, 2021

இஸ்ரேல் வான் தாக்குதலில் இரு சிரிய பொதுமக்கள் பலி, ஏழு பேர் காயம்

சிரியாவின் மத்திய பிராந்தியத்தில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் இரு பொதுமக்கள் கொல்லப்பட்டு மேலும் ஏழு பேர் காயமடைந்திருப்பதாக சிரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹோம்ஸ் நகர வானில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலை முறியடிக்க சிரிய வான் பாதுகாப்பு அமைப்பு முயற்சித்துள்ளது. 

“மத்திய பிராந்திய பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேலின் வான் தாக்குதல் இடம்பெற்றதோடு வான் பாதுகாப்பு அமைப்பு அதற்கு பதில் நடவடிக்கை மேற்கொண்டது” என்று அரச செய்தி நிறுவனமான சானா குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் ஒருவர் படுகாயம் அடைந்திருப்பதோடு ஆறு சிரிய படையினர் காயமடைந்துள்ளளனர். அண்டை நாடான லெபனானுக்கு மேலால் பறந்த பேர் விமானங்கள் நேற்று அதிகாலையில் இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக பெயரை வெளியிடாத இராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த பல ஆண்டுகளில் சிரியா மீது நூற்றுக்கணக்கான வான் தாக்குதல்களை நடத்தி இருக்கும் இஸ்ரேல் இது பற்றி எந்த பதிலும் அளிக்கவில்லை. இவ்வாறான தாக்குதல் பற்றி இஸ்ரேல் பொறுப்பேற்பது அல்லது பேசுவது மிக அரிதாகும்.

No comments:

Post a Comment