(இராஜதுரை ஹஷான்)
ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க போராட்டத்தை தொடர்வதா, இல்லையா என்பது தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிப்போம் என ஆசிரியர் அதிபர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
ஆசிரியர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினையை தவிர்த்த ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொள்ள நாளையதினம் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கத்தினரை ஒன்றிணைத்து விகாரமாதேவி பூங்கா சுற்றுவட்டத்தில் பேரணியில் ஈடுப்படவுள்ளோம் என தெரிவித்தார்.
ஆசிரியர் - அதிபர் சேவை முன்னணி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment