போதைப் பொருள் கடத்தல் : அமேசான் மீது வழக்கு பதிவு - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 24, 2021

போதைப் பொருள் கடத்தல் : அமேசான் மீது வழக்கு பதிவு

அமேசான் வலைத்தளத்தைப் பயன்படுத்தி இருவர் மரிஜுவானா போதைப் பொருள் கடத்தியதாக கூறப்பட்ட நிலையில், இந்தியாவிலுள்ள அந்நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம், மத்திய பிரதேசத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்கு 20 கிலோ போதைப் பொருள் கடத்தியதாகக் கூறி பொலிஸார் இருவரை கைது செய்தனர்.

இந்த நபர்கள், அமேசான் வலைத்தளத்தில், சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் இயற்கை இனிப்பான ஸ்டீவியா இலைகள் என்று கூறி, கனாபிஸ் போதைப் பொருளை விற்றதாகப் பொலிசார் கூறுகின்றனர்.

இது குறித்த தகவல்களைப் பொலிஸாரிடம் தாம் பகிர்ந்துள்ளதாக அமேசான் நிறுவனம் கூறியுள்ளது.

“தவறான நடத்தையை அமேசான் சிறிதும் சகித்து கொள்ளாது, எங்கள் கொள்கைகளையோ, சட்டங்களை மீறும் நபர்கள் மீதோ, மூன்றாம் தரப்பினர் மீதோ அமேசான் கடுமையான நடவடிக்கை எடுக்கும்,” என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

அந்நிறுவனம் சட்டவிரோதமான பொருட்கள் பட்டியலிடப்படுவதையோ விற்பதையோ அனுமதிப்பதில்லை எனவும், சட்டவிரோதமான பொருட்கள் சார்ந்த விதிகளை மீறும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment