யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர்களுக்கு முழந்தாளிட்டு அஞ்சலி ! - News View

Breaking

Thursday, November 25, 2021

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர்களுக்கு முழந்தாளிட்டு அஞ்சலி !

இராணுவ கெடுபிடிகள், கண்காணிப்புக்களை மீறி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

வடக்கு கிழக்கில், மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிசார் தடையுத்தரவுகளை பெற்றுள்ளனர்.

அதேவேளை கடந்த சில நாட்களாகவே யாழ். பல்கலைக்கழக சூழலில் துப்பாக்கிகளுடன் இராணுவத்தினர், பொலிஸார் குவிக்கப்பட்டு, பல்கலைக்கழக சூழலில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பும் தீவிரமாக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கண்காணிப்புக்கள், தடைகளை தாண்டி பல்கலைக்கழக வளாகத்தினுள் மாணவர்கள் மாவீரர்களுக்கு முழந்தாளிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கேசரி

No comments:

Post a Comment