மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையை நீக்கியது சுற்றுலா செல்வதற்காக அல்ல என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மக்கள் சுகாதார விதிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பது அவசியம் என தெரிவித்துள்ள அவர், மக்களுக்கான அத்தியாவசிய சேவையை தடையின்றி நடைமுறைப்படுத்துவதற்காகவே அரசாங்கம் மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையை நீக்குவதற்கு தீர்மானித்தது என்றும் தெரிவித்துள்ளார்.
மக்கள் சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதை அலட்சியம் செய்வார்களானால் நாட்டில் மீண்டும் புதிய கொரோனா வைரஸ் அலைகள் உருவாவதைத் தவிர்க்க முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.
கடந்த இரண்டு மாத காலங்களுக்கு மேல் நாட்டில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நடைமுறையில் இருந்ததுடன் நேற்று அதிகாலை 4 மணி முதல் அது முற்றாக நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment