அனுமதியின்றி ட்ரோன் கெமராவை பறக்கவிட்ட பெண்ணொருவர் உட்பட மூவர் கைது - News View

Breaking

Sunday, November 14, 2021

அனுமதியின்றி ட்ரோன் கெமராவை பறக்கவிட்ட பெண்ணொருவர் உட்பட மூவர் கைது

அனுமதியின்றி ட்ரோன் கெமராவை செலுத்தி விக்டோரியா நீர்த் தேக்கத்திற்கு அருகாமையில் ஒளிப்பதிவு செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நேற்று (13) காலை விக்டோரியா அணை, விக்டோரியா நீர்த் தேக்கம் மற்றும் 4 ஆவது இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை பகுதிகளில் அனுமதியின்றி பறக்கும் ட்ரோன் கெமராவை செலுத்தி ஒளிப்பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் இராணுவ அதிகாரிகள் தெல்தெனிய பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 28 மற்றும் 34 வயதினையுடைய கொதட்டுவ மற்றும் களனி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சந்தேக நபர்கள் இன்று தெல்தெனிய நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment