தடுப்பு மருந்தைச் செலுத்தப் பயன்படுத்தப்படும் ஊசிகளுக்குப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
அடுத்த ஆண்டு, கூடுதலாக 2 பில்லியன் ஊசிகள் வரை தேவைப்படலாம் என்று அது தெரிவித்தது.
அதனால், குறிப்பாகப் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடுவதில் தாமதம் ஏற்படலாம். அல்லது ஊசிகளை மீண்டும் பயன்படுத்தும் பாதுகாப்பற்ற சூழலும் உருவாகலாம் என்று அந்த அமைப்பு குறிப்பிட்டது.
ஊசிகளின் பற்றாக்குறையால், பொதுச் சுகாதாரத்தில் எதிர்காலத்தில் தாக்கம் ஏற்படக்கூடும் என்று அமைப்பின் வல்லுநர் லிசா ஹெட்மன் தெரிவித்தார்.
இருப்பினும் நாடுகள் அவற்றின் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். ஊசிகளைப் பெருமளவில் வாங்கிச் சேமித்து வைப்பதும் தவறு என்றார் அவர்.
உலக அளவில் 7.3 பில்லியனுக்கும் அதிகமான முறை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்று ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ஓராண்டில் வழக்கமாகப் போடப்படும் தடுப்பூசிகளைவிட அது ஒரு மடங்கு அதிகம். ஆனால் அதைப் போன்று இன்னும் ஒரு மடங்கு ஊசிகள் தற்போது தேவைப்படுகின்றன.
No comments:
Post a Comment