ஷிராஸ் யூனுஸ் எனும் நபர் எவ்வித பதவிகளிலும் இல்லை - பிரதமர் அலுவலகம் - News View

Breaking

Thursday, November 25, 2021

ஷிராஸ் யூனுஸ் எனும் நபர் எவ்வித பதவிகளிலும் இல்லை - பிரதமர் அலுவலகம்

ஷிராஸ் யூனுஸ் எனும் நபர் பிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்பாளராக செயற்படுவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஷிராஸ் யூனுஸ் எனும் குறித்த நபருக்கு பிரதமர் அலுவலகத்தில் எவ்வித பதவிகளும் வழங்கப்படவில்லையெனவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் பிரதமருக்கு எதிராகவும், பொதுஜன பெரமுனவிற்கு எதிராகவும் குறித்த நபர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமையை பிரதமர் ஊடகப் பிரிவு வன்மையாக கண்டிப்பதாக பிரதமர் அலுவலகம் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment