இலங்கைக்கு நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ள மேலும் நான்கு விமான நிறுவனங்கள் - News View

Breaking

Wednesday, November 24, 2021

இலங்கைக்கு நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ள மேலும் நான்கு விமான நிறுவனங்கள்

(இராஜதுரை ஹஷான்)

சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்தும் வகையில் எதிர்வரும் மாதம் முதல் மேலதிகமாக நான்கு விமான நிறுவனங்கள் இலங்கைக்கு நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி ரஸ்யா மற்றும் கஸகஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வாரத்திற்கு இருமுறை இலங்கைக்கு விமான சேவை முன்னெடுக்கப்படும் அத்துடன் போலந்து நாட்டிலிருந்து எதிர்வரும் 8ஆம் திகதியும், இத்தாலி நாட்டிலிருந்து எதிர்வரும் 15ஆம் திகதியும் இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்படும்.

கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்னராக காலப்பகுதியில் இலங்கையுடன் விமான சேவையை முன்னெடுத்த 37 விமான நிறுவனங்களில் 17 பயணிகள் விமான நிறுவனங்கள் மீண்டும் இலங்கையுடனான சேவையை முன்னெடுத்துள்ளன.


8 சரக்கு விமான நிறுவனங்களும் இலங்கையுடன் மீண்டும் விமான சேவையை ஆரம்பித்துள்ளன.ஏனைய விமான நிறுவனங்களின் சேவைகளை பெற்றுக் கொள்வற்கான பேச்சுவார்த்தை இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment