பிரைட் ரைஸில் மேலும் ஒரு முட்டை கேட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்தது - News View

Breaking

Wednesday, November 3, 2021

பிரைட் ரைஸில் மேலும் ஒரு முட்டை கேட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்தது

ஹோட்டல் ஒன்றில், தன்னுடைய பிரைட் ரைஸில் மேலும் ஒரு முட்டை போடுமாறு கேட்டு இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்துள்ளது.

பத்தேகம, நாகொட பிரதான வீதியிலுள்ள ஹோட்டலொன்றில் நேற்று (02) இரவு 9.30 மணியளவில் பிரைட் ரைஸ் (Fried Rice) ஒன்றை கொள்வனவு செய்ய வந்த இளைஞர் ஒருவர், குறித்த பிரைட் ரைஸில் மேலுமொரு முட்டையை போடுமாறு தெரிவித்து கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து வீட்டுக்குச் சென்ற அவர் கத்தி ஒன்றை எடுத்து வந்து ஹோட்டல் உரிமையாளரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சி செய்த நிலையில், கடை உரிமையாளரின் மகன் உலக்கையினால் தாக்கிய நிலையில், குறித்த நபர் மரணித்துள்ளார்.

பத்தேகம, நயாபாமுல, கொட்டகொட பகுதியைச் சேர்ந்த தனுஷ தேஷான் முனசிங்க களுபுத்தா எனும் 26 வயது நபவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பத்தேகம நீதவான் எச்.சி. யூ.கே. பெல்பொல சம்பவ இடத்திற்கு வந்து, மரண விசாரணைகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து, சடலம் காலி, கராபிட்டி பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பத்தேகம பொலிஸ் பொறுப்பதிகாரி பிரபாத் தேசபந்துவின் பணிப்புரையின் பேரில் பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment