ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பதன் மூலம் 603 பில்லியன் ரூபாவை அபகரிக்க அரசாங்கம் சதி ? : சம்பிக்க - News View

About Us

About Us

Breaking

Thursday, November 11, 2021

ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பதன் மூலம் 603 பில்லியன் ரூபாவை அபகரிக்க அரசாங்கம் சதி ? : சம்பிக்க

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

ஓய்வு பெரும் வயதெல்லையை அதிகரிப்பதன் மூலமாக நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நிதியை சேகரிப்பதன் மூலமாக 603 பில்லியன் ரூபாவை அரசாங்கம் வேறு தேவைகளுக்கு பயன்படுத்த சதித்திட்டம் தீட்டக்கூடாது எனவும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சபையில் தெரிவித்தார்.

வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வு பெறும் வயது சட்டமூலம், வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டில் இளம் சமூகத்தினரின் வீதம் குறைவடைந்து கொண்டே செல்கின்றன, இதே நிலைமை தொடருமானால் சிறுவர் பங்களிப்பு குறைவடைந்து வயோதிபர் எண்ணிக்கை அதிகரித்து பாரிய அளவில் தாக்கமொன்றை உருவாக்கும். அதேபோல் இளம் தலைமுறையினர் நாட்டை விட்டு வெளியேறும் நிலையில் அபிவிருத்தியில் அது தாக்கத்தை ஏற்படும்.

இந்நிலையில் இலங்கையில் ஆயுற்காலம் அதிகரித்துள்ள காரணத்தினால் ஓய்வு பெரும் வயதெல்லையை அதிகரிக்க முடியும் என கூறுகின்றனர். ஆனால் இதிலும் சிக்கல் உள்ளது, வயதானவர்கள் நாட்டின் அபிவிருத்திக்கு உதவுகின்றனரா? தொழிநுட்ப வளர்ச்சியுடன் வயதானவர்கள் பயணிக்க முடியுமா? ஆகவே வயதானவர்களை வைத்துக் கொண்டு தொழிநுட்ப வளர்ச்சியுடன் போட்டியிட முடியாது. எனவே இளைஞர்களை பணிக்கு அமர்த்த வேண்டிய அவசியம் உள்ளது.

ஓய்வு பெரும் வயதெல்லையை அதிகரிப்பதன் மூலமாக நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

2016 ஆம் ஆண்டு அறிக்கைக்கு அமைய, 55 வயதை பூர்த்தி செய்யும் நிலையில், ஊழியர் சேமலாப நிதியத்தின் மூலமாக 59 பில்லியன் ரூபா ஒரு வருடத்திற்கு சேமிக்கப்படுகின்றது. இதனை வழங்காது இருந்தால் 2021 ஆம் ஆண்டில் இந்த தொகையானது 75 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கின்றது.

ஆகவே இதனை கொடுக்காது இருக்கும் நிலையில் திறைசேரி கணக்காக இந்த தொகை மத்திய வங்கியை சென்றடையும். அதன் மூலமாக அரசாங்கத்தின் ஏனைய தேவைகளுக்காக இவற்றை பயன்படுத்த முடியும்.

இவ்வாறான நிலையொன்று ஏற்பட்டால் குறித்த நிதியை அடுத்து வரும் அரசாங்கமே செலுத்த வேண்டிவரும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 603 பில்லியன் ரூபா செலுத்த வேண்டி வரும். ஆகவே இது குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டும், அரச தேவைகளுக்காக இந்த நிதியை பயன்படுத்தாது மக்களின் பணத்தை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment