ரஷியாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் தீ விபத்து : 52 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Friday, November 26, 2021

ரஷியாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் தீ விபத்து : 52 பேர் பலி

சைபீரியாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 52 பேர் உயிரிழந்துள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு ரஷ்யாவில் ஏற்பட்ட மிக மோசமான சுரங்க விபத்தாக கூறப்படுகிறது.

நவம்பர் 25ஆம் தேதி, வியாழக்கிழமை, மாஸ்கோவிலிருந்து சுமார் 3,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லிஸ்ட்வேஸ்னியா (Listvyazhnaya) என்ற சைபீரிய சுரங்கத்தில் காற்றோட்டத்துக்காக சுரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த வாயிற் குழியில் படிந்திருந்த நிலக்கரித் துகள்களில் தீ பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டது.

அவசர உதவி சேவையைச் சேர்ந்த ஓர் அதிகாரி, சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டவர்களில் யாரும் உயிரோடு இல்லை என ஒரு செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

லிஸ்ட்வேஸ்னியா சுரங்கத்தின் இயக்குநர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பிராந்திய ஆய்வுக்குழு கூறியுள்ளது. 

49 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நான்கு பேர் மிக மோசமான நிலையில் இருக்கின்றனர். 

ரஷ்யாவில் உள்ள 58 நிலக்கரிச் சுரங்கங்களில் 34% சுரங்கங்கள் பாதுகாப்பற்றவை என்று 2016 இல் அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

No comments:

Post a Comment