பிரேசிலில் வங்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 25 பேர் பலி : இயந்திர துப்பாக்கிகள், வெடி பொருட்கள், குண்டு துளைக்காத ஆடைகள் கைப்பற்றல் - News View

About Us

About Us

Breaking

Monday, November 1, 2021

பிரேசிலில் வங்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 25 பேர் பலி : இயந்திர துப்பாக்கிகள், வெடி பொருட்கள், குண்டு துளைக்காத ஆடைகள் கைப்பற்றல்

பிரேசிலிய வங்கிக் கொள்ளையர்களின் கும்பலைச் சேர்ந்த 25 உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை மினாஸ் ஜெரைஸ் மாநிலத்தில் ஒரு விசேட பொலிஸ் நடவடிக்கையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆதாரங்களை மேற்கொள்ளிட்டு AFP செய்தி வெளியிட்டுள்ளது.


பிரேசில் நாட்டின் மினாஸ் ஜெராயிஸ் நகரின் பிரதான வீதியில் பல்வேறு வங்கிக் கிளைகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் உள்ளன. நேற்று அப்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளை கும்பல் வங்கிகளுக்குள் சென்று கொள்ளையடிக்க முயன்றது.


தகவலறிந்து அங்கு வந்த போலீசார் கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். கொள்ளையர்களும் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இவ்வாறு பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பலியான அனைவரும் திட்டமிட்ட குற்றவியல் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

மினாஸ் ஜெரைஸ் மாநிலத்தில் உள்ள வர்கினா நகரில் இந்த குழு மற்றொரு வங்கியை கொள்ளையடிக்கத் திட்டமிடுவதை அறிந்ததும் பொலிஸார் இந்த நடவடிக்கையைத் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இராணுவ காவல்துறையுடன் இணைந்து 50 அதிகாரிகளின் இந்த நடவடிக்கை வர்கினா நகருக்கு அருகில் முன்னெடுத்துள்ளனர்.

இந்த கொள்ளை கும்பலிடமிருந்து அதிக திறன் கொண்ட துப்பாக்கிகள், வெடி பொருட்கள், குண்டு துளைக்காத உள்ளாடைகள், திருடப்பட்ட வாகனங்கள் மற்றும் இதர ஆயுதங்கள் பெருமளவில் கையிருப்பில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் அவற்றை காவல்துறை அதிகாரிகள் கைப்பற்றியும் உள்ளனர்.

விசாரணையில், விடுமுறையில் வங்கிகளை கொள்ளையடிக்க இந்த குழு திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது என போலீசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment