நைஜீரியாவின் லாகோஸ் நகரில் செவ்வாயன்று 21 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 6 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
மேற்படி கட்டிடம் கட்டப்பட்டுக் கொண்டிருந்ததாகவும், அது இடிந்து விழும் போது குறைந்தது 50 பேர் உள்ளே இருந்ததாகவும் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
இகோய் மாவட்டத்தில் உள்ள ஜெரார்ட் சாலையில் அமைந்துள்ள 21 மாடிக் கட்டிடமே உள்ளூர் நேரப்படி சுமார் 14:45 மணிக்கு (13:45 GMT) இடிந்து விழ்ந்தது.
சம்பவம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பல புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
இடிந்து விழுந்த கட்டிடத்தின் உரிமையாளருக்கு 15 மாடிகளை கொண்ட கட்டிடத்தை கட்டுவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
எவ்வாறெனினும் தற்சமயம் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்கத்கது.
No comments:
Post a Comment