இலங்கையை வந்தடைந்த 1.5 மில்லியன் Pfizer தடுப்பூசி டோஸ்கள் - News View

Breaking

Monday, November 22, 2021

இலங்கையை வந்தடைந்த 1.5 மில்லியன் Pfizer தடுப்பூசி டோஸ்கள்

1.5 மில்லியன் Pfizer கொவிட் தடுப்பூசி டோஸ்கள் இன்று (22) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளன.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட இத்தடுப்பூசி டோஸ்கள், எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

நாட்டின் தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்கு அமைய, மூன்றாவது டோஸாக (Booster) இவை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5,055 கிலோ கிராம் எடை கொண்ட இந்த தடுப்பூசி அளவுகள் முதலில் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய்க்கு கொண்டு செல்லப்பட்டது.

அதன் பின்னர் அங்கிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் இன்று அதிகாலை 12.45 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

பின்னர் விசேடமாக குளிரூட்டப்பட்ட லொறிகளின் உதவியுடன் அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிபடுத்தினர்.

No comments:

Post a Comment