வினாடிக்கு 1,000 டொலர்கள் இலாபம் ஈட்டும் தடுப்பூசி நிறுவனங்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 17, 2021

வினாடிக்கு 1,000 டொலர்கள் இலாபம் ஈட்டும் தடுப்பூசி நிறுவனங்கள்

பைசர், பயொஎன்டெக், மொடர்னா ஆகிய மருந்தாக்க நிறுவனங்கள், அவற்றின் கொவிட்-19 மருந்துகளின் மூலம் நிமிடத்துக்கு மொத்தம் 65,000 டொலர் இலாபம் ஈட்டுவதாகக் கூறப்படுகிறது.

அந்த நிறுவனங்கள் அவற்றின் தடுப்பு மருந்தில் பெரும்பாலானவற்றைப் பணக்கார நாடுகளுக்கு விற்றுள்ளதாக நம்பப்படுகிறது.

அதன் காரணமாக ஏழை நாடுகளில் தடுப்பு மருந்துக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தடுப்புமருந்து கூட்டணி எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த 3 மருந்தாக்க நிறுவனங்களும் இவ்வாண்டு மட்டும் மொத்தம் 34 பில்லியன் டொலர் இலாபம் ஈட்டலாம் என அந்த அமைப்பு ஊகித்துள்ளது. அப்படியானால் வினாடிக்கு அவை 1,000 டொலர் ஈட்டுகின்றன.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் மக்களில் சராசரியாக இரண்டு வீதத்தினருக்கு மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வேளையில் அத்தகைய மருந்தாக்க நிறுவனங்கள் அவ்வளவு பெரிய இலாபம் ஈட்டுவது தவறு என சிலர் சாடியுள்ளனர்.

பைசர், பயொஎன்டெக், மொடர்னா ஆகியவை தடுப்பு மருந்து சார்ந்த வர்த்தக ஏகபோகத் தன்மையைக் கொண்டு இலாபம் ஈட்டுவதில் மட்டும் கவனம் செலுத்துகின்றன என்றும் ஏழை நாடுகளுக்கு உதவும் எண்ணத்தில் இல்லை என்றும் சிலர் குறைகூறுகின்றனர்.

No comments:

Post a Comment