இலங்கை நீர் நிலைகளில் பயங்கர வகை மீனினம் : மனிதர்களை சாப்பிடும் தன்மையுடையவையாம் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 21, 2021

இலங்கை நீர் நிலைகளில் பயங்கர வகை மீனினம் : மனிதர்களை சாப்பிடும் தன்மையுடையவையாம்

இலங்கையிலுள்ள நீர் நிலைகளில் மனிதர்களை சாப்பிடும் “பிரன்ஹா” எனப்படும் மிக ஆபத்தான மீன் வகைகள் உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏதோ ஒரு வகையில் மனிதர்களை சாப்பிடும் இந்த மீன் வகைகள் இலங்கை நீர் நிலைகளில் விடுவிக்கப்பட்டுள்ளதாக, மீன் வளர்ப்பு பிரிவின் மூத்த விஞ்ஞானி அஜித் குமார தெரிவித்துள்ளார். 

அதற்கமைய களனி கங்கை, பொல்கொட மற்றும் தியவன்னா ஏரி போன்ற இடங்களில் இந்த மீன் இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சில காலங்களுக்கு முன்பு அலங்கார மீன் தொழிலுக்கு கொண்டு வரப்பட்ட மீன்களில் பிரன்ஹாக்களும் இருந்திருக்கலாம் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட மீன்கள் ஊடாக இவை இலங்கைக்குள் வந்திருக்கலாம். அல்லது வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களின் போது இந்த மீன் வந்திருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய நிலையில் அவ்வாறான மீன்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு முடியாது. எனினும் சில காலங்களுக்கு முன்னர் அவ்வாறு கொண்டு வந்திருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment