இலங்கையில் கொவிட் தொற்றின் தீவிர நிலைமை மீண்டும் ஏற்படாதவாறு அனைவரும் பொறுப்புடன் செயற்படவும் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் - News View

Breaking

Thursday, October 7, 2021

இலங்கையில் கொவிட் தொற்றின் தீவிர நிலைமை மீண்டும் ஏற்படாதவாறு அனைவரும் பொறுப்புடன் செயற்படவும் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

(எம்.மனோசித்ரா)

நாட்டில் ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்பட்டு வெளிநாடுகளிலிருந்து ஒட்சிசனை இறக்குமதி செய்யக் கூடியளவிற்கு கொவிட் தொற்றின் தீவிர நிலைமையை இலங்கை எதிர்கொண்டுள்ளது. எனவே மீண்டும் அதுபோன்றதொரு நிலைமை ஏற்படாதவாறு அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கொவிட் பரவல் காரணமாக 3 சந்தர்ப்பங்களிலும் சிறந்த பாடத்தை கற்றுக் கொண்டுள்ளோம். எனவே இனியாவது சகலரும் சிந்தித்து செயற்பட வேண்டும். நாட்டில் ஒட்சிசன் நெருக்கடி ஏற்பட்டு, வெளிநாடுகளிலிருந்து ஒட்சிசனை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை கூட ஏற்பட்டது. இவ்வாறான பாரதூரமான பாதிப்புக்கள் மீண்டும் ஏற்படாத வகையில் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி செயற்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

ஆர்ப்பாட்டங்கள் ஊடாக கொவிட் அலை ஏற்படும் என்று நாம் கருதவில்லை. எனினும் தொழிற்சங்க தலைவர்கள் பொறுப்புணர்வு மிக்கவர்கள் என்ற அடிப்படையில் மீண்டுமொரு முறை தொற்று ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும் என்று கோருகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment