நாளை (25) தரம் 1 - 5 வரையான ஆரம்பப் பிரிவினருக்கான கல்வி நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படுகின்றன.
இந்நிலையில், தமது சீருடையை அணிய வாய்ப்பற்ற மாணவ, மாணவியர்கள் நாளை (25) தாம் விரும்பும், பொருத்தமான ஆடையுடன் பாடசாலைகளுக்கு சமுகமளிக்க முடியுமென, கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அறிவித்துள்ளார்.
கற்றல் உபகரணங்கள் மற்றும் சீருடைகளை பெற்றுக்கொள்ள முடியாத மாணவர்களுக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
200 க்கும் குறைவான மாணவர்கள் உள்ள ஆரம்ப பாடசாலைகள் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment