ரி20 உலகக் கிண்ணத் தொடரின் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான Group 1 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
ஷார்ஜாவில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 20 ஓவர்களில் 171 ஓட்டங்களை பெற்றது.
அவ்வணி சார்பில் மொஹமட் நயீம் 62 (52), முஸ்பிகுர் ரஹீம் 57* (37) ஒட்டங்களை பெற்றனர்.
இலங்கை அணி சார்பில் சமிக கருணாரத்ன, பினுர பெனாண்டோ, லஹிரு குமார ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்று, பிரதான சுற்று தொடரின் முதல் போட்டியை வென்றது.
இலங்கை அணி சார்பில் சிறப்பாக ஆடி ஆட்ட நாயகனனாக தெரிவான சரித் அசலங்க 80* (49), பானுக ராஜபக்ஷ 53 (31) ஓட்டங்களை பெற்றனர்.
பங்களாதேஷ் அணி சார்பில் ஷகிப் அல் ஹஸன், நசும் அஹமட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மொஹமட் சைபுடீன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்
அந்த வகையில் தான் விளையாடிய பிரதான சுற்று தொடரின் முதல் போட்டியில் வென்ற இலங்கை அணி 2 புள்ளிகளைப் பெற்று குழுவில் 2ஆம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் இங்கிலாந்து உள்ளது.
No comments:
Post a Comment