ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான க்ளாஸ்கோ மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வார இறுதியில் ஸ்கொட்லாந்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் 31 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த மாநாடு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
கொப்-26 என்றழைக்கப்படும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உத்தியோகபூர்வ அழைப்பிதழ் கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதிக்கு கிடைத்திருந்தது.
இரசாயன உரத்திற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள் மற்றும் சேதன இயற்கை பசளைக்கு ஜனாதிபதி வழங்கிய முக்கியத்துவம் மற்றும் இயற்கை சார்ந்த விடயங்களில் இலங்கை கொண்டிருக்கும் ஆக்கப்பூர்வமான நிலைப்பாடுகள் போன்றவற்றின் அடிப்படையிலேயே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிற்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் க்ளாஸ்கோ மாநாட்டுக்கான ஜனாதிபதியின் விஜயம் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இவ்வாரம் இறுதியில் செல்வாரென்று ஜனாதிபதி பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்தார்.
கொப்-26 மாநாடு பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. கட்டமைப்பு மாநாட்டின் இலக்குகளை நோக்கிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு பல நாடுகளையும் ஒன்றிணைப்பதாகும்.
No comments:
Post a Comment