எனது பேத்தியை முதன்முறையாக தொட்டுத் தூக்கிய தருணம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது - ஜனாதிபதி கோட்டபாய - News View

Breaking

Monday, October 4, 2021

எனது பேத்தியை முதன்முறையாக தொட்டுத் தூக்கிய தருணம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது - ஜனாதிபதி கோட்டபாய

எனது பேத்தியை முதன்முறையாக நான் தொட்டுத் தூக்கி அணைத்த அந்த தருணம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது என்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அண்மையில், ஐ.நா. பொதுச்சபை கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அமெரிக்கா சென்றிருந்தார்.

இதன்போதுதான் ஜனாதிபதியின் புதல்வர் மனோஜ் மற்றும் மருமகள் செவ்வந்தி ஆகியோரின் குழந்தையை முதன் முறையாக தொட்டு தூக்கி முத்திமிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த நெகிழ்வான சம்பவம் தொடர்பில் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அத்துடன், மனோஜ் மற்றும் செவ்வந்தி ஆகியோர் பெற்றோர் என்ற மாண்பினை அடைந்தமைக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ள ஜனாதிபதி, தாத்தா என்ற பெருமைமிகு மேன்மையை எனக்குத் தந்தமைக்கு எனது நன்றிகளையும் கூறியதாக பதவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment