அநுராதபுரம் எப்பாவல முஸ்லிம் மையவாடியில் நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 12, 2021

அநுராதபுரம் எப்பாவல முஸ்லிம் மையவாடியில் நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

அநுராதபுரம் எப்பாவல பகுதியிலுள்ள மூன்று கிராமங்களிலுள்ள முஸ்லிம் மக்களின் ஜனாசாக்களை (சடலங்களை) அடக்கம் செய்வதற்கு சட்டபூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ள பொது மயானத்தில் எந்த விதமான நிர்மாணப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டாமெனன நீதிமன்றம் உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

மயானத்துக்குள் வாகன தரிப்பிடம் ஒன்றினை அமைப்பதற்கு தலாவ பிரதேச சபையினால் எடுத்துள்ள தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கக் கோரி அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்கும் வரை மயானத்தில் எந்த விதமான நிர்மாணப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம் என தலாவ பிரதேச சபையின் தலைவருக்கு வட மத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மனோஜ் தல்கொடபிட்டியவினால் உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மயானத்தில் முஸ்லிம் மக்களது ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு எந்தவித இடையூறும் விளைவிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்டுள்ள உத்தரவினை மீறி செயற்பட்டால் நீதிமன்றத்தினை அவமதித்ததாக கருதி சட்ட நகவடிக்கை எடுக்கப்படும் என பிரதிவாதியான பிரதேச சபையின் தலைவருக்கு மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களின் உரிமையை பாதுகாப்பதற்காக எப்பாவல பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சட்டத்தரணி புத்திக்க லெவ்கே பண்டார ஊடாக அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவினை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளட்பட்ட போதே மேல் நீதிமன்ற நீதிபதி இவ்வுத்தரவினை பிறப்பித்துள்ளார்.

அநுராதபுர மாவட்டத்தின் எப்பாவல, எந்தகல மற்றும் கல்மடுவ உள்ளிட்ட கிராமங்களிலுள்ள இஸ்லாமியர்களது ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதற்காகவேண்டி 1948 ஆம் ஆண்டிலிருந்து எப்பாவல எந்தகல பகுதியில் பொது மையவாடியொன்று முஸ்லிம் மக்களுக்கு என தனியாக சட்டபூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி புத்திக லெவ்கே பண்டார விடயங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு முன்வைத்ததுடன் இது போன்ற ஒரு சட்டபூர்வமான பொது மையவாடியினுள் வாகன தரிப்பிடம் ஒன்றினை அமைப்பதற்கு வழக்கின் முதலாவது பிரதிவாதியான தலாவ பிரதேச சபையின் தலைவர் செயற்படுவதாக சட்டத்தரணி குற்றங்களை முன்வைத்தார்.

வழக்கின் முதலாவது பிரதிவாதியான பிரதேச சபையின் தலைவர் பொது மையவாடிகள் கட்டளைச் சட்டத்தினை பிரகாரம் பாரிய குற்றத்தினை செய்துள்ளதாக சட்டத்தரணி மேலும் தெளிவுபடுத்தினார்.

அநுராதபுரம் தினகரன் நிருபர்

No comments:

Post a Comment