தோட்ட உத்தியோகத்தர்களுக்கு காணிகள் வழங்க நடவடிக்கை : இலங்கை தோட்ட சேவையாளர் சங்க செயலாளர் ரொபட் பிரான்சீஸ் - News View

Breaking

Tuesday, October 12, 2021

தோட்ட உத்தியோகத்தர்களுக்கு காணிகள் வழங்க நடவடிக்கை : இலங்கை தோட்ட சேவையாளர் சங்க செயலாளர் ரொபட் பிரான்சீஸ்

பெருந்தோட்ட நிறுவனங்களில் சேவையாற்றும் தோட்ட உத்தியோகஸ்தர்களுக்கு விரைவில் காணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரொபட் பிரான்சீஸ் தெரிவித்துள்ளார்.

காணி பெறுபவர்களின் விபரங்கள் தற்போது தோட்டங்களின் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைக்க பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ள சங்கத்தின் செயலாளர் இது தொடர்பில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், சுமார் 40 வருடங்களுக்கு மேல் சொந்த வீடொன்றை கட்டிக் கொள்வதற்கு நிலம் கேட்டு இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியபோதும் அவை வெற்றியளிக்கவில்லை.

இன்னும் இச்சங்கத்தின் தலைவராக 2018 இல் தெரிவு செய்யப்பட்ட சத்துர சமரசிங்க தோட்ட உத்தியோகஸ்தர்களின் காணிப் பிச்சினைக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டதன் காரணமாகவும் அவரின் பதவிக் காலத்திற்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோகத்துடன் தீவிர நடவடிக்கை எடுத்ததன் காரணமாகவும் கண்டி, மாத்தளை மாவட்டத்திலுள்ள "மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை" மற்றும் இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்தின் கீழ்வுள்ள தோட்டங்களில் சேவையாற்றும் உத்தியோகஸ்தர்களுக்கு வீடு கட்டுவதற்கு காணி பெற்றுக் கொடுக்க முடிந்தது.

அத்துடன் நின்றுவிடாது தலைவர் சத்துர சமரசிங்க பொதுச் செயலாளர் ரொபட் பிரான்சீஸ் ஆகியோர் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரனவை பல தடவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

பெருந்தோட்ட நிறுவனங்களில் (RPC) பணி புரியும் தோட்ட உத்தியோகஸ்தர்களுக்கு காணிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டதன் காரணமாக இவ்வருடம் மார்ச் மாதம் கொழும்பில் நடைபெற்ற சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் ரமேஸ் பத்திரன சங்கத்தின் வேண்டுகோளை நிறைவேற்றுவதாக கூறினார். 

இதையடுத்து பெருந்தோட்ட மேலாண்மை மேற்பார்வை பிரிவின் இயக்குனர் ஜகத் ரவிசிங்க மூலம் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அனுப்பட்ட சுற்றறிக்கையின் பின், தோட்ட உத்தியோகஸ்தர்களில் காணி பெறுபவர்களின் விபரங்கள் தற்போது தோட்டங்களின் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைக்க பெற்றுள்ளது. இது தொடர்பில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கொவிட் தொற்றுநோய் காரணமாக நாடு முடக்கப்பட்டதால் செயற்பாடுகள் தாமதமாவதற்கு ஒரு காரணமாக அமைந்தது. எனினும் தற்போது நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் மீண்டும் அமைச்சுடன் கலந்துரையாடி இவ் செயற்திட்டத்தினை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக சங்கத்தின் பிரதான செயலாளர் ரொபட் பிரான்சீஸ் மேலும் தெரிவித்தார்.

தினகரன்

No comments:

Post a Comment