உலகில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் இலங்கைக்கு எத்தனையாது இடம் தெரியுமா - News View

Breaking

Wednesday, October 20, 2021

உலகில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் இலங்கைக்கு எத்தனையாது இடம் தெரியுமா

2021 ஆம் ஆண்டில் உலகில் மிகவும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது.

163 ஆவது இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது. பூகோளிய பாதுகாப்பு சுட்டெண் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் உலகில் மிகவும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை வெளியிடும்.

162 நாடுகள் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையில் முதலாவது இடத்தில் ஐஸ்லாந்தும், இரண்டாவது இடத்தில் டென்மார்க்கும், மூன்றாவது இடத்தில் நியூசிலாந்தும் இடம் பிடித்துள்ளன.

இதனை தொடர்ந்து நோர்வே, ஒஸ்திரியா, கட்டார், ஜப்பான், பின்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் முதல் 10 நாடுகளுக்குள் உள்ளடங்குகின்றன.

இப்பட்டியலில் இலங்கை 145 ஆவது இடத்திலும், இந்தியா 144 ஆவது இடத்திலும் உள்ளன. 163 ஆவது இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment